ஆரோக்கியம்
இந்திய உடல் பருமன் குறைப்பு மருந்து உற்பத்தி – மொத்த உலகிற்கும் சப்ளை செய்ய உத்வேகம்

இந்தியாவின் ஜெனரிக் மரந்துகள் அமெரிக்கா ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது.
இப்போது உடல் பருமன் குறைக்கும் மருந்துகள் தயாரிப்பு இந்தியாவில் வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. இது குறித்து “சன் பார்மா“ நிறுவன நிர்வாக இயக்குநர் கூறியதாவது
உடல் பருமனால் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லக்கூடிய இந்த காலகட்டத்தில் இதற்கான மேலாண்மையின் முக்கிய மையமாக இந்தியா மாறிக் கோண்டு வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் உடல் பருமன் மற்றும் நீரிழிவு பாதிப்புக்கான புதிய மருந்துகளை அணுகுவது ஒரு முக்கிய காரணியாக இருக்க போகிறது.
வரும் அண்டுகளில் இவற்றை மேம்படுத்துவது இந்திய மருத்துவத் துறைக்கு ஒரு முக்கிய உந்துதலாக இருக்கும். ஆரம்ப கால நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்புக்கான ஏஐ இயக்கப்பட்ட டிஜிட்டல் கருவிகள் மற்றம் தனிப்பயனாக்கப்பட்ட மருந்த தேர்வுகளுடன் இணைந்து இந்த துறை நோயாளிகளுக்கு மலிவு மற்றும் சிறந்த விளைவுகளை ஆதரித்து தொடர்ந்து இத்துறையில் தனது ஆய்வு மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதில் மும்முரமாக இருக்கும். என்றார்.
















