ஆரோக்கியம்
மிக மிகச் சுவையான மட்டன் குழம்பு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:
மட்டன் – 1/2 கிலோ
பட்டை – சிறிதளவு
மிளகு – அரை டீஸ்பூன்
வெங்காயம் – 4 (நறுக்கவும்)
பச்சைமிளகாய் – 7(நறுக்கவும்)
தக்காளி – 3(நறுக்கவும்)
மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்
தனியாத் தூள் – கால் டீஸ்பூன்
மட்டன் மசாலா – 3 தேக்கரண்டி
தயிர், புதினா, கொத்தமல்லி,உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
மட்டனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் உத்தி கொள்ளவும் பிறகு அதில் பட்டை, மிளகு, போட்டுத் தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் மட்டன் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் மட்டன் மசாலா, மிளகாய்த் தூள், தனியாத் தூள், தயிர், உப்பு சேர்த்து, நன்கு கொதி வந்தவுடன் பாத்திரத்தை மூடி கறி நன்றாக வேகும்வரை கொதிக்கவைக்கவும். பிறகு கறி வெற்தவுடன் புதினா, கொத்தமல்லி சேர்த்து இறக்கிப் பரிமாறலாம்.