Connect with us

ஆரோக்கியம்

மட்டன் குழம்பு செய்முறை: ஞாயிறு காலை இட்லி, சாதத்துடன் சாப்பிட சுவையான மட்டன் குழம்பு இப்படி செய்யுங்க!

Published

on

இட்லிக்கும் சாதத்திற்கும் செரிப்பான ருசி: வார இறுதியில் சுவையான மட்டன் குழம்பு இதற்குப் போல் செய்து பாருங்க!

ஞாயிற்றுக்கிழமை காலை என்றாலே இட்லி + மட்டன் குழம்பு தான் பலரின் ஹாட்டான காம்பினேஷன்! அதுவும் இந்த மசாலா ஸ்பெஷலாக செய்து பாருங்கள்… ஒருமுறை சாப்பிட்டாலே மீண்டும் மீண்டும் இப்படி தான் செய்ய நினைப்பீர்கள்!

மட்டன் குழம்பிற்கு தேவையான பொருட்கள்:

மசாலா பொடிக்கு:

  • பாதாம் – 10

  • முந்திரி – 10

  • ஜாவித்திரி – 1

  • கசூரி மெத்தி – 1 டீஸ்பூன்

  • மல்லி – 2 டீஸ்பூன்

  • சீரகம் – ½ டீஸ்பூன்

  • மிளகு – ½ டீஸ்பூன்

  • காஷ்மீர் வரமிளகாய் – 3

குழம்புக்கு:

  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

  • நெய் – 1 டேபிள் ஸ்பூன்

  • வெங்காயம் – 3 (நறுக்கியது)

  • தக்காளி – 1 (நறுக்கியது)

  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்

  • மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

  • மிளகாய் தூள் – 1½ டீஸ்பூன்

  • கரம் மசாலா – ½ டீஸ்பூன்

  • தயிர் – 3 டேபிள் ஸ்பூன்

  • மட்டன் – 750 கிராம்

  • உப்பு – தேவைக்கேற்ப

  • தண்ணீர் – தேவையான அளவு

  • கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

  1. பாதாம், முந்திரி, ஜாவித்திரி, கசூரி மெத்தி, மல்லி, சீரகம், மிளகு, காஷ்மீர் மிளகாய் ஆகியவற்றை வாணலியில் வறுக்கவும்.

  2. அது குளிர்ந்ததும் மிக்ஸியில் பொடி செய்து வைக்கவும்.

  3. குக்கரில் எண்ணெய், நெய் சேர்த்து வெங்காயம் வதக்கவும்.

  4. தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

  5. பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, அரைத்த பொடி சேர்த்து வதக்கவும்.

  6. தயிர் சேர்த்து கிளறவும்.

  7. மட்டன், உப்பு சேர்த்து நன்கு கிளறி, தேவையான தண்ணீர் ஊற்றி 5-6 விசில் வைத்து வேகவைக்கவும்.

  8. பின் கொத்தமல்லி தூவி கிளறி பரிமாறலாம்.

Translate »
Sites no coding.