ஆரோக்கியம்
சத்தான அரிசி பொரி உப்புமா!

தேவையானவை:
அரிசி பொரி – 1பார்கெட்
பெ.வெங்காயம் – 1(நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 3(நறுக்கவும்)
மஞ்சள் தூள் – சிறிதளவு
வேர்க்கடலை – கால் கப்(பொடிக்கவும்)
எலுமிச்சம்பழ சாறு – சிறிதளவு
கடுகு, உளுந்தம் பருப்பு – சிறிதளவு
சீரகம் – கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை,
கொத்தமல்லி தழை – சிறிதளவு
கேரட் – 1 (துருவவும்)
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
செய்முறை:

puffed rice upma
அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பொரியைப் போட்டு பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்பு பொரியை நன்றாகப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடும், உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றைக் கொட்டி தாளிக்கவும்.
பின்பு வெங்காயம், மிளகாயைக் கொட்டி வதக்கவும். வெங்காயம் ஓரளவு வதங்கியதும் மஞ்சள் தூள், உப்பு தூவி கிளறவும். பின்பு பொரி, வேர்க்கடலையைக் கொட்டி கிளறவும். ஓரளவு வதங்கியதும் எலுமிச்சை சாறு, கேரட் துருவல், கொத்தமல்லி தழையை தூவி இறக்கிப் பரிமாறவும்.