ஆரோக்கியம்
மிகச் சுவையான, சத்தான முருங்கை கீரை உப்புமா செய்வது எப்படி?

தேவையானவை:
முருங்கை கீரை – 1கட்டு
இட்சி அரிசி – 2கப்
துவரம் பருப்பு – அரை கப்
தேங்காய்த் துருவல் – கால் கப்
காய்ந்த மிளகாய் – 5
சீரகம் – கால் தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு
மோர் மிளகாய் – 5
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முருங்கை கீரையைத் தண்ணீரில் அலசிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இட்லி அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைத்துக்கொள்ளவும். பின்பு இட்சி அரிசி, துவரம் பருப்பு, மிளகாய், தேங்காய்த் துருவல், சீரகம் போன்றவற்றை மிக்சியில் கொட்டி லேசாக அரைத்துக்கொள்ளவும்.
அந்த மாவு கலவையுடன் முருங்கை கீரை, உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கரைத்து இட்லித் தட்டில் வேகவைத்துக்கொள்ளவும். இட்லி ஆறியதும் பொடித்தாக உதிர்த்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அதி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, மோர் மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதில் உதிர்த்த இட்லி கலவையைப் போட்டுக் கிளறி இறக்கவும்.