சினிமா செய்திகள்
அஜித் வீட்டிலேயே ‘வலிமை’ டப்பிங் பணிகளா?

அஜித் கட்டியிருக்கும் புதிய வீட்டில் டப்பிங் தியேட்டர் உள்பட பல்வேறு வசதிகள் இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது அஜித் நடித்து முடித்திருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் டப்பிங் பணியை அவரது வீட்டிலுள்ள டப்பிங் தியேட்டரிலேயே முடிக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியானது,
ஆனால் அந்த செய்தி தவறானது என்று அஜித் தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். அஜித் வழக்கம் போல் வெளியில் உள்ள பின் ஸ்டூடியோவில் தான் டப்பிங் செய்வார் என்றும் அவரது வீட்டிலுள்ள டப்பிங் ஸ்டுடியோ இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்றும் கூறப்படுகிறது,
மேலும் ‘வலிமை’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் அதற்குள் அஜித் தவிர மற்ற நட்சத்திரங்களின் டப்பிங் பணிகளை முடிக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது,
மேலும் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் தயாராகி விட்டதாகவும் அஜித்தின் அனுமதி பெற்று எப்பொழுது வேண்டுமானாலும் அந்த மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி வெளிவரலாம் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது,



















