இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.11.2026

- இந்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்போது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் (OBC) இணைத்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் வருகிற நவ.28 அன்று நடைபெறும் போராட்டத்திற்கு தி.மு.க ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து ஓபிசி அமைப்புகளின் தலைவர்களும் இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளனர்.
- அலுவலகப் பணிகளுக்கு வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
- “த.வெ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, உணவளிக்கும் உழவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த ஒட்டுமொத்தப் பிரச்சினைகள் குறித்து காவிரி விவசாயிகள் கருத்துக் கேட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.”- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
- திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் இன்று தொடங்குகிறது! தொடக்கம்: நவம்பர் 23, 2026 – காலை 11:20 மணி நிறைவு: நவம்பர் 24, 2026 – காலை 9:24 மணி அண்ணாமலையார் அருளைப் பெற பக்தியுடன் கிரிவலம் செல்வோம்!
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏ. ராஜ்மோகன் மீது ஊழல் வழக்கு தொடர அனுமதி கோரி ஆளுநருக்கு திமுக கடிதம்!
- திருப்பரங்குன்றம் மலை & சுற்று வட்டாரப்பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை – மதுரை மாநகர காவல்துறை அறிவிப்பு திருப்பரங்குன்றம் (RED ZONE) சிவப்பு மண்டலமாக அறிவிப்பு! திருப்பரங்குன்றத்தில் நாளை கார்த்திகை தீப திருவிழா – 12 எஸ்.பி. தலைமையில் 5,618 போலீசார் குவிப்பு
- டாஸ்மாக்கில் ரூ.1000க்கு மேல் மது வாங்கினால் யுபிஐ கட்டாயம்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை
- தமிழ்நாட்டில் இதுவரை 450 நில அளவைக்கல் கண்டறியப்பட்டுள்ளன; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவில் முதற்கட்டமாக 484 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு தமிழ்நாட்டில் இதுவரை 450 நில அளவைக்கல் கண்டறியப்பட்டள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல்.
