இந்தியா
இரவு நேரச் செய்திகள் – 25.11.2026

- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி மற்றும் அது தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களிலிருந்து நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான வழக்கில் நீதிமன்றத் தடையை மீறித் தவறான கருத்துகளை வெளியிட்டதாகத் தமிழக அரசுத் தரப்பில் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீதான பாலியல் புகாரை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு. வனத்துறை செயலர் காகர்லா உஷா தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைப்பு. மதுமதி ஐஏஎஸ், சட்டத்துறை செயலர் சுமதி, சுனிதா ஜோ ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். 60 நாட்களில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலர் சாய் குமார் உத்தரவு.
- ஈரானின் பரந்த நிலப்பரப்பு, அண்டை நாடுகளுடனான எல்லை இணைப்புகள் மற்றும் பிராந்திய உறவுகள் காரணமாக, அந்நாட்டைத் தரைவழியாக முற்றுகையிடுவது நடைமுறையில் சாத்தியமற்றது என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
- தவெக எம்.எல்.ஏ. விவகாரம்: உதயநிதி பேட்டிக்கு எதிராக முறையீடு- ஆட்சேபத்துக்குரிய வீடியோக்களை நீக்கலாம்- உயர்நீதிமன்றம்
- 2026 டிசம்பர் 12ம் தேதி ‘அண்ணாமலை’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
- 10 மாத இடைவெளிக்கு பிறகு டிசம்பரில் மீண்டும் பாம்பன் கால்வாயில் கப்பல் போக்குவரத்து: பழைய பாலம் 80 சதவீதம் அகற்றம்; சுற்றுலா பயணிகள் உற்சாகம்
- தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
