இந்தியா
பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

- காவல்துறையிடம் ஒருவர் கூறியதாகப் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலமும், நீதிமன்றத்தில் சாட்சியாக அவர் அளிக்கும் வாக்குமூலமும் ஒன்றல்ல. பிறழ்சாட்சியின் முந்தைய வாக்குமூலத்தை வைத்து மட்டும் ஒருவரைக் குற்றவாளியாக அறிவிக்க முடியாது. சட்டப்படி நிரூபிக்கப்பட்ட சாட்சியங்களும் ஆதாரங்களுமே குற்றவியல் தண்டனைக்கு அடிப்படையாக இருக்க வேண்டும். இது குற்றவியல் வழக்குகளில் சாட்சியங்களின் சட்டப்பூர்வ மதிப்பை வலியுறுத்தும் முக்கியமான உச்சநீதிமன்றத் தீர்ப்பாகும்.
- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ஏழு மாதங்களாகச் சரிந்து வந்த நிலையில் மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் 10-ம் தேதிக்குப் பிறகு முதல்முறையாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 93-லிருந்து ரூ.92.67 ஆக உயர்ந்துள்ளது.
- திருச்செந்தூர் கோயிலில் முதல்வர், அமைச்சருக்கு ‘அரோகரா’ முழக்கம்: வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிக்கை!
- பழிவாங்குவது எங்கள் உரிமை என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) தளபதி மேஜர் ஜெனரல் வஹிதி தெரிவித்துள்ளார். மேலும், கொலைகாரர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் இனி உலகம் பாதுகாப்பான இடமாக இருக்காது எனக் கூறிய அவர், பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்பாகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
- சென்னை, கோவை, தூத்துக்குடியை இணைக்கும் வகையில் தமிழ்நாட்டில் தொழில் விரைவுச் சாலை அமைப்பதற்கான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ள ஆலோசகரைத் தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த டெண்டருக்கு நவம்பர் 23 முதல் டிசம்பர் 22 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- 15 ஊழியர்கள் வெளியேற்றம்; 3 பேர் ஆந்திராவுக்கு தாவல் தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டிய கைடன்ஸ் நிறுவனத்தில் அடுத்தடுத்து சர்ச்சை; தமிழகத்தின் முதலீட்டு வாய்ப்புகள் கேள்விக்குறி?
- தமிழகத்தில் 742 டாஸ்மாக் கடைகளில் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை: சென்னையில் 319 கடைகள் தேர்வு. புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஜாக்டேனியல்ஸ், பிளாக்லேபிள், ஏ.பி.பாரோநெட், விஎஸ்ஓபி, நெப்போலியன் உள்ளிட்ட பிரபல மதுபானங்கள் கூடுதல் கடைகளில் கிடைக்க வாய்ப்பு.
- வட கொரியா தனது சொந்த AI Chatbot-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு “Fountain of Wisdom” (அறிவின் ஊற்று) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த Chatbot, கொரிய மற்றும் ஆங்கில மொழிகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் திறன் கொண்டது. இந்த Chatbot, வட கொரியாவின் கிம் இல் சுங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், பியாங்யாங்கைச் சேர்ந்த ஒரு மென்பொருள் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
- பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் (ASEAN) உச்சிமாநாட்டில் பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “உக்ரைனில் பிரெஞ்சுப் படையினர் இருப்பது இனிமேலும் ஆதரவு கிடையாது; இது போரில் பிரான்ஸ் நேரடியாகப் பங்கேற்கும் செயல்” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.



