இந்தியா
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியது

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்க எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எம்எல்ஏ மீது புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர்மீது ஜாமீனில் வெளி வரமுடியாத 5 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் பதியப்பட்டுள்ளது.
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்புர் எஸ்பி ஷ்ருஷ்டி சிங் நியமிக்கப்பட்டுள்ளார். காவல் தலைமையக நிர்வாக ஐஜி காமினி இந்த விசாரணையை கண்காணிப்பார் என ஐகோர்ட்டில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் தெரிவித்துள்ளார்.
இவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
1.BNS 75(1)(i) r/ 75 (2) – பாலியல் நோக்கத்துடன் கூடிய அணுகுமுறைகளுக்கான குற்றம்
2.BNS 75 (1)(iv) r/w 75(3) – பாலியல் ரீதியான ஆபாச கருத்துக்கள் தெரிவிப்பது
3.BNS 78(2) – தவறான நோக்கத்துடன் ஒருவரைப் பின்தொடர்தல்
4.BNS 132 – அரசு ஊழியரை கடமையை செய்ய விடாமல் தடுத்தல்
5.section 4 (பெண் வன்கொடுமை தடுப்ப சட்டம்) பணியிடத்தில் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தல்
தவெக மேலிடம் எம்எல்ஏவை பதவியை ராஜினாமா செய்த விட்டு வழக்கை எதிர்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாக கடைசி கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்நிதிமன்ற நீதிபதி இப்பொருள் தொடர்பாக சமூக வலை தளங்களில் உள்ள செய்திகளின் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
தலைமறைவாக உள்ள எம்எல்ஏ வின் செல்பேசியை பறிமுதல் செய்து சைபர் கிரைம் பிரிவு மூலம் ஆய்வு செய்ய திட்டமிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
