இந்தியா
பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 20.11.2026

- மக்களின் பணம் கோடிக்கணக்கில் (ரூ.680 கோடி) செலவிடப்பட்டுள்ள நிலையில் பரந்துஸர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டது என்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி. 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைப்பு.
- மனிதத் தசையை விட 100 மடங்கு வலிமையான செயற்கைத் தசை! தென் கொரிய விஞ்ஞானிகளின் புதிய சாதனை! தென் கொரியாவின் UNIST பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹூன் யூய் ஜியோங் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், மிகக் குறைந்த எடையிலும் அதிக சுமையைத் தாங்கக்கூடிய புதிய செயற்கைத் தசையை உருவாக்கியுள்ளனர்.
- ஓய்வ பெறும் பி.எஃப். உறுப்பினர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியை தவணை முறையில் எடுக்கும் புதிய திட்டத்திற்கு ஒன்றிய அரச ஒப்புதல். குறைந்தபட்ச இருப்புத் தொகையை 10 சதவீதமாக குறைக்க ஒப்புதல். பி.எஃப் பணத்தை இறுதிக்கட்டமாக பெறுவதற்கான காத்திருப்பு காலம் 12லிருந்து 2 மாதங்களாக குறையும்.
- ரோஹிங்கியா முஸ்லிம்களின் இனப்படுகொ##க்கு மியான்மரே பொறுப்பு! சர்வதேச நீதிமன்றம் (ICJ) அதிரடி தீர்ப்பு
- “திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றலாம். அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டும்தான் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படுவார்கள். முழக்கங்களை எழுப்புவது, கும்பலாகக் கூடுவது போன்றவற்றிற்கு அனுமதி இல்லை” என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு. த.வெ.க அரசு சார்பில் முறையீடு செய்யும் வழக்குகள் தொடர்ந்து பின்னடைவை சந்திக்கும் நிலையில், திருப்பரங்குன்றம் வழக்கின் இறுதி விசாரணை ஜனவரி இரண்டாம் வாரத்தில் நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
- லஞ்ச வழக்கில் சிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசின் முன் அனுமதி தேவையில்லை – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
- உடுமலைப் பேட்டையில் உள்ள தனியார் மருத்தவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பட்ட காலதாமதம் காரணமாக தனது இடது காலை இழந்த இளைஞருக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்குமாறும் அத்தொகைக்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டியும் சேர்த்து வழங்குமாறும் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு.





