Connect with us

இந்தியா

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

Published

on

  1. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சைபர் தாக்குதல்களை நடத்தும் ARTEX என்ற ஹேக்கிங் கட்டமைப்பைப் பற்றி அமெரிக்காவின் FBI கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. தாக்குதலின் தொடக்கத்திலிருந்து முக்கியமான நிர்வாக அதிகாரங்களைப் பெறும் நிலைக்கு சில ஹேக்கர்கள் மூன்று மணி நேரத்திற்குள்ளாகவே முன்னேறியுள்ளதாக FBI தெரிவித்துள்ளது.
  2. குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களுக்கு 18 மாதங்களுக்கு இலவசமாக வழங்கி வரப்பட்ட ரூ.35100 மதிப்பிலான இலவச GOOGLE AI PRO சலுகையை நிறுத்தியது  JIO நிறுவனம். இனி புதிதாக ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு கிடைக்காது. ஏற்கனவே இதை claim  செய்து பயன்படுத்துபவர்களுக்கு பாதிப்பில்லை எனவும் அறிவிப்பு.
  3. மேட்டூர் அருகே கொளத்தூரில் குற்ற செயல்களில் ஈடுபடவும் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கில் ஊடுருவியுள்ள வடமாநில பவாரியா கும்பல் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீஸார் அறிவித்துள்ளனர்
  4. மத்தியப் பிரதேசத்தில் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் அரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை என்ற விதி நீக்கம். மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் 2001ம் ஆண்டு கொண்டவரப்பட்ட இந்த விதி தளர்த்தப்பட்டு 3 குழந்தைகள் பெற்றவர்களும் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  5. முதுமலை மற்றும் கர்நாடகாவின் பந்திப்புர் புலிகள் காப்பகங்களில் வாகனத்தில் சவாரி சென்ற அமைச்சர் வன்னி அரசு காட்டு யானைக்கு மிக அருகில் சென்றது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பேசிய கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி “இந்த விவகாரம் முழுமையாக விசாரிக்கப்படும். அவரவர் பதவி எதுவாக இருந்தாலும் வனப்பகுதிகளில் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அணைவரும் பின்பற்ற வேண்டும்“ எனத் தெரிவித்துள்ளார்.
  6. பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவது தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்பை அமல்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்! பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடும் முடிவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்றும், அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
  7. உலக பாரம்பரிய வாரத்தையொட்டி, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டையில் நவம்பர் 19 முதல் 25 வரை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி பார்வையிட அனுமதி

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா7 minutes ago

இரவு நேரச் செய்திகள் – 19.11.2026

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.11.2026

Uncategorized7 மணி நேரங்கள் ago

செல்வ வளமும் லக்ஷ்மி கடாக்ஷமும் பெருக வீட்டின் ஹாலில் இருக்க வேண்டிய முக்கிய வாஸ்து பொருட்கள்

இந்தியா7 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

இந்தியா11 மணி நேரங்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

நவகிரக கோயில்கள் தரிசனம் அரை நாளிலா? பக்தர்களுக்கான பரவச ஆன்மீகப் பயணம்

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 18.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 18.11.2026

சினிமா2 நாட்கள் ago

இனியா நடிப்பில் பெண்ணுரிமை, மண்ணுரிமையைப் பேசும் ‘வன்னி’!

வணிகம்6 நாட்கள் ago

A2B-க்கு ₹1,696 கோடி டீல்! பெரும்பான்மைப் பங்குகளை வாங்கும் Bodhi Tree… அடுத்தது என்ன?

Uncategorized6 நாட்கள் ago

பொது விநியோகத் திட்டத்தில் ஊழலைத் தடுக்க மத்திய அரசு புதிய ‘ஈ-ருப்பி’ (e-RUPI) டிஜிட்டல் வவுச்சர் QR கோடு வவுச்சர் முறை

சினிமா4 நாட்கள் ago

பத்து நாள் ராஜா – விரைவில் திரைக்கு வரும் புதிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

இந்தியா5 நாட்கள் ago

ரயில் பயணிகளுக்கு..! விரைவில் ஆர்.ஏ.சி. முறையை ரத்து செய்ய ரயில்வே திட்டம்..!

பர்சனல் ஃபினான்ஸ்3 நாட்கள் ago

RBI புதிய கடன் வசூல் விதிகள் 2027: இனி ஏஜென்ட்களுக்கு கடும் கட்டுப்பாடு!

இந்தியா5 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 14.11.2026

தமிழ்நாடு6 நாட்கள் ago

இதிலும் தமிழ்நாடு முதலிடமா? சபாஷ் தவெக அரசு!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.11.2026

Translate »
Martinstools — continued by nordicnodes.