இந்தியா
இரவு நேரச் செய்திகள் – 24.11.2026

- 2003ஆம் ஆண்டு பாக்தாத்தில் சதாம் ஹுசைனின் சிலையைச் சம்மட்டியால் உடைத்து உலகம் முழுவதும் பிரபலமான ஈராக் குடிமகன் காதிம் ஷரீப் அல்-ஜபூரி, தனது அந்தச் செயலுக்காகத் தற்போது ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். சதாமை வீழ்த்த துணை போனதால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவும், அன்றைய ஆட்சியே பாதுகாப்பாக இருந்ததாகவும் அவர் வேதனை வெளியிட்டுள்ளார்.
- மியான்மர் செயற்பாட்டாளரும் கல்வியாளருமான மவுங் சார்னி, ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலை நடைபெற்ற காலகட்டத்தில், மியான்மர் ராணுவத்திற்கு இஸ்ரேல் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
- நெதன்யாகுவுக்கு விழுந்த பேரிடி அரபுக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பு அடுத்த பிரதமராக ஐசென்கோட்? இஸ்ரேல் அரசியலில் பரபரப்பு
- இஸ்ரேலிய தொலைக்காட்சி தயாரிப்பாளரான எலாட் பராஷி (Elad Barashi), காசாவில் வாழும் பெண்கள், குழந்தைகள் உட்பட ஒட்டுமொத்த மக்களும் மரணத்திற்குத் தகுதியானவர்கள் எனக் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒப்புதல் இல்லாமலேயே ஈரானுக்கு எதிராக புதிய போரை தொடங்க திட்டமிட்டு வருவதாக இஸ்ரேலின் சேனல் 12 தெரிவித்துள்ளது.
- திருவண்ணாமலையிலும் திருப்பரங்குன்றத்திலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
