இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.11.2026

- அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கப் படைகளைத் தொடர்ந்து ஈடுபடுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை அமெரிக்க செனட் சபை நிராகரித்துள்ளது.
- அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைதியான போராட்டங்களின்போது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை (Tear Gas) பயன்படுத்துவதைத் தடை செய்யவும், மிளகுத் தெளிப்பான்களின் (Pepper Spray) பயன்பாட்டைக் கடுமையாகக் கட்டுப்படுத்தவும் மேயர் ஜோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியர்களுக்கான விசா இல்லாத அனுமதியை ரத்து செய்கிறது மலேசிய அரசு. ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. டிசம்பர் 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- போர்க்களத்தில் 491 நாட்கள் தனி ஆளாகப் போராடி, தனது காலையே துண்டித்துத் தப்பிய உக்ரைனிய சிப்பாயை ‘Ayudag-6’ என்ற ராட்சத ட்ரோன் மூலம் வான்வழியாக மீட்டு உக்ரைன் ராணுவம் வரலாற்று சாதனை படைத்துள்ளது!
- நாசா (NASA) விண்வெளி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட ‘வாயேஜர் 1’ (Voyager 1) விண்கலம், பூமியிலிருந்து ஒரு ‘ஒளி-நாள்’ (1 Light-Day) தொலைவை எட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஒளியானது 24 மணி நேரத்தில் பயணிக்கும் இந்தத் தொலைவு, சுமார் 25.9 பில்லியன் கிலோமீட்டர்கள் (சுமார் 16.1 பில்லியன் மைல்கள்) ஆகும். 1977-ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம், சுமார் 49 ஆண்டுகள் பயணத்திற்குப் பிறகு இந்த மைல்கல்லை அடைந்துள்ளது.
- கர்நாடகாவில் பைக் டாக்சி தடையை நீக்கிய உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநில அரச தாக்கல் செய்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். தடை விதிப்பதை விட உரிய விதிமுறைகளுடன் ஒழுங்குபடுத்துவதே சிறந்தது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.





