இந்தியா
இரவு நேரச் செய்திகள் – 23.11.2026

- அரசு நில ஆக்கிரமிப்பு வழக்கில் சாஸ்த்ரா பல்கலை.க்கு எதிராக தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!
- வாட்ஸ்அப் வெப் கணக்கை நிரந்தரமாக Log-In நிலையில் வைத்திருக்க வேண்டாம்; ஒவ்வொரு முறையும் பயன்படுத்திய பிறகு Log-Out செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!
- இந்தியாவின் முதல் தானியங்கி ட்ரோன் எதிர்ப்பு நுண் ஏவுகணை JWALA எம்.கே-1 பொக்ரானில் வெற்றிகரமாகச் சோதனை! இது 2 முதல் 5 கி.மீ.தூரத்திலும் 50 மீட்டர் முதல் 5000 மீட்டர் வரையிலான உயரத்திலும் உள்ள ட்ரோன்களை தாக்கும் திறன் கொண்டது.
- ஆசியாவின் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடம்.
- இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ஆங்கிலத்திலும் ‘West Bengal’ என்பதற்குப் பதிலாக ‘Paschim Banga’ என மாற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது. மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
