இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.11.2026

- நெருங்கிய ரத்த சொந்தங்களுக்கு இடையே நடக்கும் திருமணங்களை கட்டுப்படுத்துவது குறித்து ஒன்றிய அரசின் கருத்தைக் கேட்ட உச்ச நீதிமன்றம்
- ஈரானின் ஆயுதப் படைகள் தேவைப்படும் நேரத்தில் எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றிச் செயல்படும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளதாக, தெஹ்ரானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழுகையின் போது இடைக்கால இமாம் முகமது ஜவாத் ஹஜாலியாக்பரி தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டிலுள்ள அணைத்து பேருந்து நிலையங்களிலும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
- நாகை மாவட்டம் கோடியக்கரையில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 77 படகுகள் மீன்பிடிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!
- அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் டேட்டா சென்டர்கள் அமைத்தால் கூடுதல் வரி விதிக்கப்படும். – ட்ரம்ப்.
- ஒவ்வொரு இந்து வீட்டிலும் உரிமம் பெற்ற துப்பாக்கி அவசியம் – பாஜக எம்.எல்.ஏ. டி.ராஜா சிங்
- சீனாவின் ஷென்சென் நகரில் 151 மனித உருவ ரோபோக்கள் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து நடனமாடி புதிய கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளன. நவம்பர் 17, 2026 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அனைத்து ரோபோக்களும் ஒரே இசைக்கு ஏற்ப ஒரே மாதிரியான அசைவுகளுடன் நடனமாடின. இந்தச் சாதனையை கின்னஸ் உலகச் சாதனை நடுவர் உறுதிப்படுத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
- “இந்த ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும், யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை.”- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
- திரைத்துறையில் அளப்பரிய பங்கேற்பிற்காக 2026ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது கமல்ஹாசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



