இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.11.2026

- உச்ச நீதிமன்ற உத்தரவு வேண்டுமென்றே மீறப்பட்டால், எஸ்.ஆர். பொம்மை வழக்கில் வகுக்கப்பட்டுள்ள கோட்பாடுகளின் அடிப்படையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 356-உடன் இணைத்துப் படிக்கப்படும் பிரிவு 144ன் படி தவெக அரசை கலைக்க முடியும்.
- ராஜினாமா செய்தால் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவல் தடை சட்டத்தில் இருந்து தப்ப முடியுமா? சபாநாயகர் இழுத்தடிக்க முடியுமா? உச்சநீதிமன்றத்தில் முக்கிய வழக்கு!
- ஈரோட்டில் கலைஞர் சிலைகளை உடைத்தவர் தவெக கட்சிக்கார்ராக செயல்படுபவர் என்று தகவல்.
- திருப்பரங்குன்றம் உச்சி பிள்ளையார் கோயிலில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டுள்ளது மலை மீது உள்ள் தூணில் இதுவரை தீபம் ஏற்றவில்லை.. மத மோதல்கள் இல்லாத அமைதி பூங்காவாகவே தமிழ்நாடு திகழட்டும்.. எப்போதும் போல இந்து முஸ்லிம் கிருத்துவ வேறுபாடுகளின்றி சகோதரர்களாகவே இருப்போம்..
- உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திருப்பரங்குன்ற தீபம் குறித்த விசாரணை நிறைவுற்றது. உச்சநீதிமன்ற உத்தரவு முழுமையாக நிறைவேற்றப்படும் என்று நம்புவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே வழக்கமான தீபம் ஏற்றும் தூணில் தீபம் ஏற்றும் பணிகள் துவங்கி உள்ளன. நீதிபதி சாமிநாதன் அமர்வு இந்த விசாரணை மூலம் என்ன செய்தியை சொல்ல வருகிறது என்று தெரியவில்லை. இந்த விசாரணை குறித்து தமிழ்நாடு அரசியல் கட்சிகள் நீதிமன்ற பயங்கரவாதம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
- 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, இஸ்ரேலிய ராணுவத்தில் பணியில் இருந்த 23 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த 16 ஆண்டுகளில் இஸ்ரேலிய ராணுவத்தில் பதிவான மிக உயர்ந்த வருடாந்திர எண்ணிக்கை இது என்று ‘ஹாரெட்ஸ்’ (Haaretz) நாளிதழ் திங்கள்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
- தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்புர் எஸ்பி ஷ்ருஷ்டி சிங் நியமிக்கப்பட்டுள்ளார். காவல் தலைமையக நிவாக ஐஜி காமினி இந்த விசாரணையை கண்காணிப்பார் என ஐகோர்ட்டில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் தெரிவித்துள்ளார். இவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
