இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.11.2026

- சேலம் மாவட்ட கிழக்கு பகுதிகளில் விளையும் தேன்வாழையை பழனி முருகன் கோயில் பஞ்சாதிர்தம் தயாரிப்புக்காக மீண்டும் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் மற்ற ரகங்களை விட கூடுதல் விலை கிடைப்பதால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தள்ளனர்.
- நுரையீரல் தொற்று மற்றும் காய்ச்சல் காரணமாக கடந்த செப்டம்பர் 9ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தவெகவின் கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2.24 மணிக்கு மரணமடைந்தார்.
- தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியத் தகவல்கள் ஆந்திராவுக்குக் கசிந்ததாகக் குற்றச்சாட்டு! இதன் தொடர்பாக Guidance Tamil Nadu அமைப்பில் பணியாற்றிய 15 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் வர வேண்டிய முதலீடுகள் தொடர்பான ரகசியங்கள் கசிவது மிகப்பெரிய அதிர்ச்சி!
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.95,840க்கு விற்பனை!
- வி.எஸ்.பாபு மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
- மத நம்பிக்கைகளின் பெயரில் விலங்குகளை பலியிடுவதற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
- சீனாவில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் அதிபர்கள் சந்திப்ப. அணு ஆயுத கட்டுப்பாடு குறித்து தலைவர்கள் முக்கிய பேச்சுவார்த்தை.





