சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் வைரல் டீசர்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, கதாநாயகநான நடித்துள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். ஈழத் தமிழர் ரோலில் விஜய் சேதுபதி இதில் நடித்துள்ளதால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் இயக்குநர் மகிழ்திருமேனி, விவேக், கனிகா, ரித்விகா, கரு.பழனியப்பன், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வெங்கட கிருஷ்ண ரோக்நாத் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்து உள்ளார். இன்னும் இந்தப் படம் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்பது குறித்து தகவல் இல்லை. ஆனால் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிவடைந்த தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் இருக்கிறது. இதனால் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்தப் படத்தின் வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.
டீசர் வீடியோ: