சினிமா
ஷாருக்கானையே பின்னுக்குத் தள்ளிய ராஷி கன்னா; IMDB பட்டியலில் முதலிடம்!

காவி பிகினி உடையை அணிந்து கொண்டு அந்த குலுக்கல் டான்ஸ் போட்டும் நடிகை தீபிகா படுகோன் IMDB சிறந்த நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கவில்லை.
1000 கோடி வசூல் செய்த பதான் படத்தை கொடுத்த நடிகர் ஷாருக்கானையே பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் நடிகை ராஷி கன்னா. இந்த வாரம் இந்தியளவில் சிறந்த டாப் 10 நடிகர்கள் பட்டியலை IMDB வெளியிட்டுள்ளது.

#image_title
ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஃபர்ஸி வெப்சீரிஸ் தான் எல்லாத்துக்கும் காரணம்.
ஃபர்ஸி வெப்சீரிஸில் நாயகனாக நடித்த ஷாகித் கபூர் மற்றும் விஜய்சேதுபதிக்கு கூட கிடைக்காத அளவுக்கு IMDBல் இவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகை ராஷி கன்னா முதலிடத்தை பிடித்த நிலையில், நடிகர் ஷாருக்கான் 2ம் இடத்தையும் விஜய்சேதுபதி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

#image_title
ஃபர்ஸி வெப்சீரிஸில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்த ரெஜினா கசாண்ட்ரா 4வது இடத்திலும், ஆதித்யா சோப்ரா 5வது இடத்தையும் நடிகை தீபிகா படுகோன் 6வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
7வது இடத்தை காதர் கானும் 8வது இடத்தில் ஃபர்ஸியில் ஷாகித் கபூரின் நண்பராக நடித்த புவன் ஆரோராவும் பிடித்துள்ளனர்.
IMDB பட்டியலில் 9வது இடத்தில் அனுபம் கெர்ரும் கடைசி இடமான 10வது இடத்தில் சமீபத்தில் திருமணமான நடிகை கியாரா அத்வானியும் பிடித்துள்ளனர்.