சினிமா
யாதும் ஊரே யாவரும் கேளிர் விமர்சனம்: விஜய்சேதுபதியின் உழைப்பு எல்லாம் இப்படி வீணாப்போச்சே!

இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மேகா ஆகாஷ், கனிகா, மோகன் ராஜா, மறைந்த நடிகர் விவேக் மற்றும் வில்லனாக இயக்குநர் மகிழ் திருமேனி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் பல தடைகளை தாண்டி ஒரு வழியாக ரிலீஸ் ஆனால் போதும் என ரிலீஸ் ஆகி உள்ளது.
படத்தின் ரிசல்ட் அவர்களுக்கே தெரிந்த நிலையில், பெரிதாக விளம்பரம் எதுவுமே செய்யாமல் வெளியிட்டுள்ளனர்.

#image_title
இலங்கையை சேர்ந்த புனிதன் (விஜய்சேதுபதி) லண்டன் இசை பள்ளியில் சேர்ந்து இசையை கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறான். ஆனால், லண்டனுக்கு செல்லும் வழியில் ராணுவத்தால் கைது செய்யப்படும் சிறுவன் சிறையில் இருந்து இளைஞனாக வெளியே வருகிறான்.
அங்கிருந்து கள்ளத் தோணி வழியாக கேராளவுக்கு சென்று இசையை கற்றுக் கொள்கிறார். லண்டனில் நடக்கும் ஒரு இசைப் போட்டியில் கலந்து கொள்ள நினைக்கும் புனிதன் பல்வேறு முயற்சிகள் செய்து அங்கே செல்ல முயலும் போது அவருக்கான அடையாளத்தை கொடுக்க முடியவில்லை.

#image_title
அதன் பின்னர் கிருபாநதி என்கிற பெயரில் அடையாளத்தை பெற கொடைக்கானலுக்கு செல்கிறார். இதற்கு இடையே மேகா ஆகாஷ் உடன் காதல் போலீஸ் அதிகாரியான இயக்குநர் மகிழ் திருமேனி உடன் மோதல் சர்ச் ஃபாதரான விவேக்கின் உதவி என படம் பல்வேறு படகுகளில் பயணிப்பதால் சரியான இலக்கை அடைய முடியாமல் தவிக்கிறது.
உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் இந்த உலகமே சொந்தம் தான் என்பதும், போர், நிலத்தின் மீதான வெறி, இந்த நாட்டுக்காரன், அந்த நாட்டுக்காரன், அகதி, அகதியால் எப்படி வெளிநாட்டுக்கு போக முடியும் என ஏகப்பட்ட பிரச்சனைகள் உலகம் முழுவதும் உள்ளதை சுட்டிக் காட்டும் விதமாக சமூக சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட இந்த படத்தில் கமர்ஷியல் கலந்து கொடுக்கிறேன் என டோட்டலாக சொதப்பி விட்டது தான் படத்தின் பலவீனமாக மாறி விட்டது.
அத்தனை சொதப்பல்களையும் கடந்தால் கடைசியில் விஜய்சேதுபதி பேசும் அந்த கிளைமேக்ஸ் வசன காட்சி மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைகிறது.
ரேட்டிங்: 2.25/5.