சினிமா
அது விஜய் இல்லை பாய்.. ஷாருக்கானுக்கு பாடம் நடத்திய தளபதி ரசிகர்கள்!

ஜவான் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை முன்னிட்டு ரசிகர்களுடன் கொஞ்ச நேரம் நடிகர் ஷாருக்கான் ட்விட்டரில் சாட் செய்திருந்தார்.
ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்து வந்த ஷாருக்கானிடம் ஜவான் படத்தின் ஷூட்டிங் பற்றி சொல்லுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, அட்லீ, விஜய் மற்றும் நயன்தாரா உடன் செம ஃபன்னாக இருக்கு என ஷாருக்கான் ட்வீட் போட்டுள்ளார்.

#image_title
விஜய் என ஷாருக்கான் சொன்னதும் ஜவான் படத்தில் விஜய் நடிக்கிறார் ஷாருக்கானே சொல்லிட்டார் என விஜய் ரசிகர்கள் சிலர் கொண்டாட தொடங்கிய நிலையில், பல தளபதி ரசிகர்கள் அது விஜய் இல்லை பாய்.. விஜய்சேதுபதின்னு சேர்த்து சொல்லுங்க என ஷாருக்கானுக்கு பாடம் எடுத்து வருகின்றனர்.
மேலும், ஜவான் போஸ்டரில் உங்கள் முகமே தெரியலையே என கிண்டலாக ரசிகர்கள் கேட்ட நிலையில், பலரும் ஜவான் மோஷன் போஸ்டரில் என் மூஞ்சி தெரியலன்னு சொல்றாங்க அதான் இதோ என் மூஞ்சி என புதிய செல்ஃபி போட்டோவையும் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார் ஷாருக்கான்.

#image_title
அது விஜய் இல்லை கொஞ்சம் சும்மா இருங்கடா என விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் பல வகையான மீம்களை போட்டு விளக்கி வருவது செம ஃபன்னாக உள்ளதாக நெட்டிசன்கள் அதனை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
மேலும், நயன்தாரா பற்றி லேடி சூப்பர்ஸ்டார் ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, அவங்க ரொம்ப ஸ்வீட்டானவங்க, திறமையான நடிகை என பாராட்டி உள்ளார்.
ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து வரும் நிலையில், #VijaySethupathi ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.