Connect with us

சினிமா

விடுதலை விமர்சனம்: தமிழ் சினிமாவின் இன்னொரு தரமான படம்!

Published

on

பொல்லாதவன் படத்தில் இயக்குநராக அறிமுகமாகி ஆடுகளம், விசாரணை, அசுரன் என அடுத்தடுத்து பிரம்மிக்க வைக்கும் படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து வரும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி உள்ள இன்னொரு தமிழ் சினிமாவின் பெருமை மிக்க படம் தான் இந்த விடுதலை முதல் பாகம்.

சூரியை எல்லாம் ஹீரோவாக வைத்து வெற்றிமாறன் என்னத்த படத்தை இயக்கப் போறாரு என நினைத்தவர்களுக்கு திரையில் குமரேசன் கதாபாத்திரத்திற்கு சூரியை விட்டா தமிழ் சினிமாவில் வேற ஆளே கிடையாதேப்பா என யோசிக்க வைப்பது தான் வெற்றிமாறனின் தனித்துவமான முத்திரை.

viduthalai

விஜய்சேதுபதி எத்தனை வெரைட்டியாக நடித்தாலும், இவ்வளவு தான் அவரது நடிப்பு என்றும் இதற்கு மேல் அவரிடம் சரக்கு இல்லை என்றும் ட்ரோல் செய்த ரசிகர்களுக்கு பெருமாள் வாத்தியார் கதாபாத்திரம் மூலம் சல்யூட் செய்ய வைத்திருக்கிறார் வெற்றிமாறன்.

கேப்டன் ஆஃப் தி ஷிப் என்றால் எல்லா இயக்குநர்களையும் சொல்லி விட முடியாது என்றும் அதற்கு பொருத்தமான ஆளாக வெற்றிமாறன் படத்தின் ஆரம்பத்தில் இருந்து முதல் பாதி முடிவடைந்து, இரண்டாம் பாதிக்கான லீடு கொடுத்து நாளைக்கே அந்த பாகத்தையும் ரிலீஸ் செய்யுங்க என ரசிகர்கள் கெஞ்சும் அளவுக்கு ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார்.

Vetrimaran

தருமபுரி போல அருமபுரி என்கிற ஊருக்கு அருகே சுரங்க பாதையை அமைக்க அரசும் தனியார் நிறுவனமும் திட்டம் போட்டு வரும் நிலையில், அதற்கு வேட்டு வைக்க ஆரம்ப காட்சியிலேயே மிகப்பெரிய ரயில் விபத்தை பெருமாள் வாத்தியாரின் ஆட்கள் செய்கின்றனர்.

வண்டலூர் அருகே செட் போட்டு எடுக்கப்பட்ட காட்சியா இது என நம்பவே முடியாத அளவுக்கு அந்த காட்சியை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படமாக்கி உள்ளார். ஆரம்பத்தில் அத்தனை நீளமான சிங்கிள் ஷாட் காட்சியை 360 டிகிரியும் கேமராவை சுற்ற வைத்து உருவாக்கி பிரம்மிப்பை கொடுத்து விடுதலை உலகத்திற்குள் ரசிகர்களை கூட்டிச் செல்கிறார் வெற்றிமாறன்.

அந்த ரயில் வெடிப்பு சம்பவத்தை செய்தது பெருமாள் வாத்தியார் தான் என்பது தெரிய வந்தாலும் போலீஸாருக்கு அவர் யார் என்பது தெரியாது. கோஸ்ட்டை பிடிக்க வேண்டும் என்கிற ஆப்பரேஷன் டிஎஸ்பி கெளதம் மேனன் தலைமையில் நடக்கிறது. அவருக்கு கீழே சேத்தன் காட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களை மிரட்டி உள்ளார்.

viduthalai scene

ஜீப் ஓட்டும் டிரைவரான குமரேசன் மலைவாழ் பெண்ணான பவானிஸ்ரீ மீது காதல் கொள்கிறார். அப்பாவியான வெள்ளந்தி மனிதரான அவருக்கு சேத்தன் தண்டனை கொடுத்து பணியாள் வேலையை பார்க்க வைக்கிறார்.

பெருமாள் வாத்தியாரை சூரியால் மட்டும் நெருங்க முடியும் சூழலில் போலீஸாருக்கு பெருமாள் வாத்தியாரை சூரி எப்படி காட்டிக் கொடுக்கிறார் என்றும் அதற்கான காரணம் என்ன? என்பது தான் முதல் பாகத்தின் கதையே.. இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதியின் ருத்ர தாண்டவம் அரங்கேறும் என தெரிகிறது.

Vijay Sethupathi

1987ம் ஆண்டு காலக்கட்டத்தில் படம் நடக்கிற சூழலில் கலை இயக்குநர் கச்சிதமாக வேலைகளை செய்திருக்கிறார். அடர்ந்த காட்டுப் பகுதியில் நடந்தே செல்ல சிரமமாக இருக்கும் இடங்களில் எல்லாம் வேல்ராஜ் எப்படி கேமராவை கொண்டு சென்று படமாக்கினார் என்பதே பிரம்மிப்பாக உள்ளது. உலகத்தரமான படைப்புகளை செய்ய வேண்டும் என்றால் அதற்கு இப்படியெல்லாம் கஷ்டப்படுவது அவசியம் தான் என்றும் தோன்ற வைக்கிறது.

காவல் நிலையத்தில் மலைவாழ் பெண்களை ஹீரோயின் பவானிஸ்ரீயையும் சேர்த்து அழைத்துச் சென்று ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி கொடுக்கும் டார்ச்சர் காட்சிகள் தான் படத்தை பார்க்கும் ரசிகர்களை உணர்ச்சிவசப்படுத்துகிறது. பெண்களை நிர்வாணப்படுத்தி விட்டு மிளகாய்ப் பொடி கொண்டு வா என சொல்லும் போதே குலை நடுங்குகிறது.

சென்சாரில் அந்த காட்சியை தடை செய்யவில்லை என்றாலும், முழு நிர்வாணமாக காட்டக் கூடாது என்பதற்காக பிளர் பண்ணி இருந்தாலும் சில இடங்களின் அழுத்தமான காட்சிகள் ஜெய்பீமில் அந்த பாவாடையை கழட்டி கொடுமைப்படுத்தும் காட்சியை விட கொடூரமாக மனதை இறுக செய்கிறது.

வசனங்கள் ஒவ்வொன்றும் அரசுக்கு எதிராகவும் கார்ப்பரேட்டுக்கு எதிராகவும் கொஞ்சம் கூட சமரசம் இல்லாமல் இயக்குநர் வெற்றிமாறன் கையாண்டுள்ள விதம் மெய் சிலிர்க்க வைக்கிறது. நூறு குடும்பம் கூட இல்லாத இடத்துக்கு பக்கத்துல 100 அடி ரோடு எதுக்கு? அந்த மக்களின் நலனுக்காக அது? இல்லை கார்ப்பரேட்டின் வளர்ச்சிக்கு என சொல்லும் இடங்கள் எல்லாம் சாட்டையடி வசனங்கள் தான். பெருமாள் வாத்தியாராக விஜய்சேதுபதி அப்படியே வாழ்ந்திருக்கிறார். அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் அப்படியே அரசியல் அறிவு இல்லாதவர்களுக்கு மறைமுகமாக அரசியலில் என்ன எல்லாம் நடக்கிறது என்பதை பாடமாக புகட்டுகிறது.

விசாரணை படத்தை போலவே விடுதலை படமும் ஏகப்பட்ட விருதுகளை குவிக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. இளையராஜாவின் இசை எந்த இடத்துக்கு தேவையோ அங்கே மட்டும் ஒலித்து மற்ற இடங்களில் அமைதி காத்து ரசிகர்களை கனத்த இதயத்துடன் தியேட்டரை விட்டு வெளியேறச் செய்கிறது. விடுதலை – வெற்றி! ரேட்டிங் – 4/5.

வணிகம்18 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?