தொழில்நுட்பம்
உலகின் முதல் அதிவேக கடல் சுரங்கப்பாதை ரயில் திட்டம்.! களமிறங்கியது சீனா.!

பெய்ஜிங்: அதிவேக ரயில்களின் பிறப்பிடமான சீனா, தற்பொழுது கடலுக்கடியில் செல்லும் அதிவேக ரயிலைத் தயாரிக்கவுள்ளதென்ற செய்தி தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திட்டம் நீங்போ நகரத்திலிருந்து சோஹுஹான் தீவுக்கிடையில் மொத்தம் 70.92 கிலோ மீட்டர் தூரத்தை, இந்த ரயில் திட்டம் இணைக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் கடல் சுரங்கப்பாதை ரயில் நீங்போ நகரத்திலிருந்து சோஹுஹான் தீவிற்கிடையில் 16.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு மிக விரைவில் திறக்கப்படுமென்று சீனா தெரிவித்துள்ளது.
உலகின் முதல் கடல் சுரங்கப்பாதை ரயில் மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்படி உருவாக்கப்படவுள்ளதாகவும், இந்த அதிவேக ரயில் வெறும் 30 நிமிடத்தில் நீங்போ நகரத்திலிருந்து சோஹுஹான் தீவை சென்றடையுமென்று சீனா அறிவித்துள்ளது.
















