சினிமா செய்திகள்
ஷங்கர் கை விட்டால் என்ன? ஹாலிவுட்டுக்கு செல்லும் காஜல் அகர்வால்!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் நடிப்பில் இந்தியன் 2 படம் எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை படம் துவங்குவதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை.
சிலர், படம் கைவிடப்பட்டதாகவே கூறி வருகின்றனர். இதனால், அப்செட்டாக இருந்த நடிகை காஜல் அகர்வாலுக்கு, தற்போது ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தெலுங்கின் முன்னணி நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு, தயாரித்து நடிக்கும் தெலுங்கு படம், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது.
மேலும், இந்த படத்தை ஹாலிவுட் இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளார். தெலுங்கு பட சாயல் இல்லாமல், ஹாலிவுட் தரத்தில் இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















