Connect with us

சினிமா செய்திகள்

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

Published

on

Kamal Haasan flew to Taiwan; Viral photo!

‘இந்தியன்2’ படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் தைவான் சென்றிருக்கக்கூடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் தற்போது ‘இந்தியன்2’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு நிறைவடைய இருக்கிறது. தைவான், தென் ஆப்பிரிக்கா என வெளிநாடுகளில் அடுத்த சில வாரங்களுக்குப் படப்பிடிப்பை படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்போது ’இந்தியன்2’ படத்திற்காக தைவான் புறப்படுகிறேன்’ என நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் ஷங்கர் வருகிற ஜூன் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், புரோமோ பாடலுடன் படத்தின் அப்டேட்டும் கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதன்பிறகு, ஜூன் மாதத்திற்குப் பின் போஸ்ட் புரொடக்‌ஷன் ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத்சிங் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

‘இந்தியன்2’ படத்தினை முடித்தப் பிறகு வினோத் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Links to your homepage and selected subpages are placed into a rotating link pool together with links from other websites using this free link building tool..