சினிமா செய்திகள்
பாகுபலி, கே.ஜி.எப் படங்களை காலி செய்ய வரப்போகும் தமிழ்த் திரைப்படம்: மாபெரும் வெற்றி நிச்சயம்!

இயக்குநர் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படம் மற்றும் கன்னடத் திரைப்படமான கேஜிஎப்-க்குப் பிறகு, அதே போல் ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர். இந்த இரண்டுத் திரைப்படங்களும் வெளிவந்த பிறகு, இப்படங்களுக்கு இணையாக தமிழ்த் திரையுலகில் இதுவரை எந்தப் படமும் வரவில்லையே என்பது போல் தமிழ் ரசிகர்கள் பேசத் தொடங்கினர்.
பொன்னியின் செல்வன்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும், எதிர்பார்த்த அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. மேலும் வசூலிலும் பாகுபலி மற்றும் கேஜிஎப்-ஐ நெருங்கவில்லை. இந்த நிலையில், இவ்விருத் திரைப்படங்களையும் தவிடு பொடியாக்கும் வகையில், தமிழ்த் திரையுலகில் விரைவாக ஒரு திரைப்படம் வெளிவர உள்ளதாம்.
இந்தியன்-2
எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ள இந்த தமிழ்ப் படம் தான் இந்தியன்-2. உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுவரையிலும் எடுத்த இந்தியன்-2 திரைப்படத்தை, சமீபத்தில் கமல்ஹாசனுக்கு போட்டுக் காட்டியுள்ளார் இயக்குநர் சங்கர். திரைப்படத்தை பார்த்த கமல்ஹாசன் பிரமித்து விட்டாராம். இத்திரைப்படம் நிச்சயமாக மாபெரும் வெற்றியைப் பெறும் என்பது போல் பாராட்டி உள்ளார் கமல்ஹாசன்.
இதனால் நிச்சயமாக பாகுபலி மற்றும் கே.ஜி.எப் திரைப்படங்களின் பேச்சு, இனி கோலிவுட் திரையுலகில் எடுபடாது என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.