சினிமா
’தர்மதுரை’ படத்திற்கு பின் மீண்டும் விஜய்சேதுபதி-தமன்னா!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பிரபல நடிகை தமன்னா ஆகிய இருவரும் இணைந்து ’தர்மதுரை’ என்ற திரைப்படத்தில் நடித்தார்கள் என்பதும் இந்த படத்தை பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கி இருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் தமன்னா இணைந்துள்ளனர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி போலவே சன் டிவியில் பிரமாண்டமாக ’மாஸ்டர் செஃப்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் தெலுங்கு பதிப்பை நடிகை தமன்னா தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிகழ்ச்சிக்கான தமிழ், தெலுங்கு புரோமோ படப்பிடிப்பு ஒரே நேரத்தில் நடைபெற்ற நிலையில் இந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி மற்றும் தமன்னா கலந்து கொண்டனர். அப்போது இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ’மாஸ்டர் செஃப் தெலுங்கு நிகழ்ச்சியில் படப்பிடிப்பின்போது விஜய் சேதுபதி இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் என்று பதிவு செய்துள்ளார்.






















