சினிமா செய்திகள்
‘ஜெயிலர்’ ஆக்ஷன் காட்சியில் பிஸியாகும் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார் என பல முன்னணி நடிகர்களும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.
பான் இந்தியா படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. சென்னையைத் தொடர்ந்து தற்போது இதன் படப்பிடிப்பு பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்த பெங்களூர் படப்பிடிப்பில் படத்தின் முக்கியமான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.
இதற்காக கிட்டத்தட்ட ஒருவார காலம் கடுமையான பயிற்சி எடுத்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். படத்தின் முக்கியமான ஹைலைட்டாகவும் இது இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த சண்டைக் காட்சியில் மட்டும் நடிகர்கள் மோகன்லால், சுனில், சிவராஜ் குமார் மற்றும் தமன்னா என படத்தின் முக்கிய நடிகர்கள் ஒன்றிணைய இருப்பதால் திரையில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் எனவும் படக்குழு வட்டாரம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் முடிவத்து மே அல்லது ஜூன் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. பான் இந்தியா படமாக வர இருக்கும் ‘ஜெயிலர்’ரில் தனக்கான போர்ஷனை இன்னும் ஒருவார காலத்தில் முடித்துவிட்டு அடுத்து ‘லால்சலாம்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் ரஜினிகாந்த்.