சினிமா செய்திகள்
திரையரங்குகளில் விஜய்சேதுபதியின் ’லாபம்’: ரிலீஸ் தேதி இதுதான்!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ’லாபம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் விஜய் சேதுபதி தற்போது சுமார் 15 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் ஒரு சில திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக விஜய் சேதுபதியின் படங்கள் முடங்கி இருப்பதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவான ’லாபம்’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது. இதனை அடுத்து சற்று முன்னர் இந்த படம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் சேபதி திரைப்படம் ஒன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருப்பதால் அவரது ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமான இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’லாபம்’ திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்முதலாக விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார் என்பதும் மேலும் இந்த திரைப்படத்தில் கலையரசன், ரமேஷ்திலக் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார் என்பதும், விஜய்சேதுபதி இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Laabam Grand Release On September 9th in Theaters Near You ????#SPJhananathan @immancomposer @KalaiActor @vsp_productions @thilak_ramesh @7CsPvtPte @Aaru_Dir @yogeshdir @LahariMusic @proyuvraaj @sathishoffl pic.twitter.com/EraapMmpd1
— VijaySethupathi (@VijaySethuOffl) August 25, 2021












