இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

- குவைத்தில் 4 வருட இடைவெளிக்குப் பிறகு சிவில் ஐடிகள் வீட்டிற்க்கே டெலிவரி செய்யும் சேவை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: குவைத்தில் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு குடியிருப்பு அனுமதிக்கான சிவில் ஐடி அட்டைகளை வீட்டிற்கே கொண்டுவந்து வழங்கும் சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது.
- நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்துகளில் ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் 23 பேர் உயிரிழப்பு! மத்தியப் பிரதேசத்தில் 13 பேரும், மகாராஷ்டிராவில் 6 பேரும் உயிரிழந்த நிலையில், பல இடங்களில் பொருட்கள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன.
- கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர்களை பயன்படுத்தாதது ஏன்? மெட்ராஸ் ஐகோர்ட் அதிருப்தி
- ஈரான் போரில் இஸ்ரேலுக்காக செலவழித்த அனைத்து செலவுகளையும் திரும்பப் பெறப்போகிறேன்” அந்தத்தொகை எவ்வளவு இருந்தாலும் அவை அனைத்தும் அமெரிக்கா கட்டாயம் வாங்கும்” – டிரம்ப் பேச்சு.
- இலங்கைக்கு உரத்தைக் கொண்டுவரும் கப்பலொன்றுக்கு ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பாதுகாப்பாகச் செல்வதற்கு ஈரான் அரசு அனுமதி வழங்கியுள்ளது!
- “ஊழலை ஒழிக்க ரூ.500, ரூ.2,000 நோட்டுகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்!” -சந்திரபாபு நாயுடு
- ஜப்பானில் ‘இனேமுரி’ (Inemuri) என்றழைக்கப்படும் ஒரு வித்தியாசமான பழக்கம் உள்ளது. இதன் பொருள், இருக்கும் இடத்திலேயே சிறிது நேரம் கண் அயர்வதாகும். சில ஜப்பானிய நிறுவனங்கள் ஊழியர்கள் அலுவலகத்திலேயே சிறிது நேரம் ஓய்வெடுத்துத் தூங்குவதற்காகத் தனி அறைகளையும் வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளன.

