உலகம்
எச்-1பி விசா வைத்துள்ளவர்களுக்கு விலக்கு அளித்த அமெரிக்கா!

அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்துள்ளவர்களுக்கு மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அலுவலகம் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் பணிபுரியச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் விசா முறையே எச்-1பி. இந்த எச்-1பி விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரிவதற்கான காலக்கெடு முடிந்தவர்கள் அதை நீட்டிக்கவும், கிரீன் கார்டு பெறவும் விண்ணப்பிப்பார்கள்.
இப்படி எச்-1பி விசா காலக்கெடு நீட்டிப்பு மற்றும் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்தற்கான காலக்கெடு முடிந்து இருந்தாலும், கோரோனா வைரஸ் தக்கத்தின் காரணமாகக் காலாவதியான தேதியிலிருந்து 60 நாட்கள் வரை காலக்கெடு நீட்டித்து விலக்கு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் குடியேற்றத் துறையில் எந்த வித சிக்கலும் ஏற்படக் கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது.
அமெரிக்காவில் இதுவரை கொரோனாவல் 65 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளது, உலக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2017-ம் ஆண்டின் கணக்கு படி அமெரிக்காவில் 44 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர்.



















