இந்தியா
அமெரிக்காவில் லட்சக்கணக்கில் வருவாய்.. வேலையை ராஜினாமா செய்த இந்திய தம்பதிகள்.. அதன்பின் நடந்தது என்ன?

அமெரிக்காவில் மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் தரும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பிய தம்பதிகள் ஆர்கானிக் விவசாயத்தில் ஈடுபட்டு மன நிம்மதியுடன் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளது பெரும் ஆசிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த மகேஸ்வரி மற்றும் பாட்டியா தம்பதிகள் அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்தில் லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் ஊழியராக இருந்தனர். ஆனால் இவர்களுக்கு அந்த நகர வாழ்க்கை பிடிக்கவில்லை. இயற்கை சூழலுக்கு எதிராக மனிதர்கள் இருப்பதாக உணர்ந்த அவர்கள் மன நிம்மதி இல்லாமல் அந்த வேலையை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற போதுதான் இயற்கையின் அதிசயத்தை அறிந்து அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதனை அடுத்து இயற்கை சூழலுடன் வாழ வேண்டும் என்று முடிவு செய்து அவர்கள் உடனடியாக தங்கள் பணியை ராஜினாமா செய்தனர். இதனை அடுத்து இந்தியா திருப்பிய மகேஸ்வரி மற்றும் பாட்டியா தம்பதியினர் மத்திய பிரதேச மாநிலத்தில் 1.5 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆரம்பித்தனர்.
ஆர்கானிக் விவசாயம் குறித்து முழு ஆய்வு செய்து அதன் பின் இயற்கையான பழங்கள் மற்றும் காய்கறிகள் விவசாயம் செய்தனர். இப்போது தங்களுக்கு நிரந்தரமான வருமானம் கிடைத்து வருவதாகவும் இந்த வருமானம் தங்களுடைய வாழ்க்கைக்கு போதும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இயற்கையோடு வாழ்வது தங்களுக்கு மன நிம்மதியாக இருக்கிறது என்றும் மனிதர்கள் எந்த அளவு சுற்றுச்சூழலை சுரண்டுகிறார்கள் என்பதை நாங்கள் அறிந்தோம் என்றும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆர்கானிக் விவசாயம் குறித்து தங்களால் முடிந்தவரை அந்த பகுதி மக்களுக்கு அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் பழங்கள் மற்றும் காய்கறிகளை ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்வது எவ்வளவு நல்லது என்பதை கூறி வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் தற்போது தற்போது அவர்கள் இயற்கை சூழலுடன் வாழ வேண்டும் என்பதற்காக மண் சுவற்றால் கட்டப்பட்ட வீட்டில் தான் குடியிருந்து வருவதாகவும் வாழ்க்கை மிகவும் திருப்திகரமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இலட்சக்கணக்கில் சம்பளம் பெற்று அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்த இந்த தம்பதிகள் தற்போது மண் சுவர் உள்ள வீட்டில் ஆர்கானிக் விவசாயம் செய்து வரும் நபர்களாக மாறி உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.