இந்தியா
மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான National Insurance Company Limited நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.
விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
கல்வித்தகுதி – நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவதொரு பல்கலைக் கழகத்தில் ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். எந்த மாநிலத்தின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கப் படுகிறதோ அந்த மாநிலத்தின் மொழியில் சரளமாக எழுதப் படிக்கப் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
18.07.2026 முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் – 07.08.2026
நாட்டின் 38 மாநிலங்களில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாட்டில் 49 காலி பணியிடங்கள் உள்ளன.
வயது தகுதி – 02.07.1996க்கு பிறகு 30.06.2005 வரை பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
வயது வரம்பில் சலுகை – எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
மாதச் சம்பளம் – ரூ.36600 லிருந்து ரூ.53000 வரை
தேர்வுக் கட்டணம் – எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை. மற்றவர்களுக்கு ரூ.850 கட்டணமாக ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
ஆன்லைன் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். பின்னர் நேர்முகத் தேர்வு இருக்கும்.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி – https://nationalinsurance.nic.co.in/












