இந்தியா
வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் வாகனங்கள் தங்களுக்குள் தகவல் பரிமாறிக் கொள்ளும் “வி2வி“ வசதியை அடுத்து ஆண்டு முதல் கட்டாயமாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த V2V வசதி மூலம் ஒரு வாகனம் சாலையில் செல்லும் போது அருகில் வருகின்ற அல்லது போகின்ற வாகனங்களின் இந்த அமைப்படன் தானாகவே தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாறிக் கொள்ள உள்ளன.
இந்த V2V வசதி மூலம் அருகில் உள்ள வாகனத்தின் வேகம் அது எவ்வளவு தூரத்தில் உள்ளது பயணிக்கும் திசை முதலிய தகவல்களை ஓட்டுநர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் இந்த அமைப்பு செயல்படும்.
சிம் கார்டு இல்லாமல் வயர்லெஸ் தொழில்நுட்பம் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் ஆகியவற்றின் துணையுடன் இயங்கக்நுகூடிய இந்த கருவிகள் 5.875 – 5.905 GHZ அலைவரிசையில் இயங்கும்.
வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த திட்டத்திற்கான வரைவு விதிகள் குறித்து பொதுமக்களிடம் ஒன்றிய அரசு கருத்து கேட்ப நடத்திட உள்ளது.







