உலகம்
முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது: அமெரிக்காவில் பரபரப்பு!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆபாச நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் உடன் இருந்த உறவை மறைக்க 2016-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து ஒரு பெரும் தொகையை வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் டொனால்ட் டிரம்ப் தற்போது கைதாகி உள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டொனால்ட் டிரம்ப் மீது பல பெண்கள் வீடியோ ஆதாரங்களுடன் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் ஆபாச நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் தான் வெளியிட்ட புத்தகத்தில் டிரம்ப் உடனான உறவு குறித்து எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார். இது 2016-ஆம் ஆண்டு தேர்தலில் எதிரொலித்ததால் டிரம்ப் அதனை மூடி மறைக்க பெரும் தொகையை அந்த நடிகைக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் 34 பொய்யான வணிக பதிவுகள் வைத்திருந்ததாகவும் டிரம்ப் மீது குற்றச்சாட்டு உண்டு.
இந்த வழக்கில் டிரம்பிற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் திடீரென அவருக்கு எதிராக சாட்சியளித்ததை தொடர்ந்து டிரம்ப் பணம் வழங்கியதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்நிலையில் மான்ஹட்டன் நீதிமன்றத்தில் சரணடைந்த டொனால்ட் டிரம்ப் முறைப்படி கைது செய்யப்பட்டுள்ளார். முன்னால் அதிபர் என்பதால் அவருக்கு கை விலங்குகள் போடப்படவில்லை. குற்றவாளிகளுக்கு செய்யப்படும் கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்தல் மேற்கொள்ளப்பட்டது.