இந்தியா
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூரில் சடைபெற்ற தவெக கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் எனக்கூறி ஆட்சிக்கு வந்த விஜய் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இம்மாதம் 10ம் தேதி வழங்கிய பணி ஆணைகளை சென்னை உயர்நீதிமன்ற அதுரை கிளை இன்று ரத்து செய்து உத்தரவிட்டது.
முன்னதாக அரசு சார்பில் வாதாடிய அரசு வழக்கறிஞர் சாதாரண பணி மட்டுமே வழங்கப்பட்டதாக தெரிவித்தார். அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் பின்வரும் கேள்விகளை தவெக அரசை நோக்கி எழுப்பியுள்ளது,
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி உதவியிருக்கலாமே?
இதேபோல் பேருந்து விபத்து பட்டாசு ஆலை விபத்து ஆகியவற்றில் உயரிழந்தோர்க்கும் வேலை வழங்குவீர்களா?
கருணை அடிப்படையில் வேலை பெற ஏற்கனவெ பலர் பல ஆண்டுகளாக காத்திருக்கும் நிலையில் கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இந்த முன்னுரிமை ஏன்?
இவ்வாறு கேள்விகளை எழுப்பியது நீதிமன்றம்.
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார் நாளை இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்றையீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.






