சினிமா செய்திகள்
சிவப்பு மஞ்சள் பச்சை அதிரவைக்கும் மேக்கிங் வீடியோ!
பிச்சைக்காரன் படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டை தொடர்ந்து இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.
சித்தார்த் டிராபிக் இன்ஸ்பெக்டராகவும், ஜி.வி. பிரகாஷ் பைக் ரேசராகவும் நடித்துள்ள இந்த படம், நிச்சயம் இருவருக்கும் வேற லெவல் அனுபவத்தையும் அவர்களின் ரசிகர்களுக்கு ஏற்ற தரமான விருந்தாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாயகன் பைக் ரேசர் என்பதால், அடி பட்டு விட்டால், ஷூட்டிங் கெட்டுவிடும் என்பதால், ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்காக பைக் ஸ்டண்ட் பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக இயக்குநர் சசி மேக்கிங் வீடியோவில் கூறியுள்ளார். மேலும், தன்னுடன் வேலை செய்த நாயகர்களில் நடிகர் சித்தார்த் டெடிகேஷன் தன்னை மெய் சிலிர்க்க வைத்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ் சித்தார்த்துக்கு ஜோடியாகவும், காஷ்மீரா ஜீ.வி. பிரகாஷுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.


















