Connect with us

சினிமா

ஜூன் 19ல் ரிலீஸாகும் விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’ 

Published

on

தாயை தெய்வமாக மதித்தான் அது ‘பிச்சைக்காரன்’, தாயை மனுஷியாக பார்க்க தொடங்கினான் அது ‘நூறு சாமி’ – இயக்குனர் சசி!

இயக்குநர் சசி-நடிகர் விஜய் ஆண்டனி மீண்டும் இணையும், ஒற்றைத் தாயின் கதையை சொல்லும் உணர்வுப்பூர்வமான திரைப்படம் ‘நூறு சாமி‘ ஜூன் 19ல் வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது

*விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் ‘நூறு சாமி’ திரைப்படத்தில் சுவாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்*

மாபெரும் வெற்றி பெற்ற ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சசியும், நடிகர் விஜய் ஆண்டனியும் மீண்டும் இணைந்துள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று உலகெங்கும் வெளியாகிறது.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் ‘நூறு சாமி’, உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் கிராமத்து பின்னணியில் ஒற்றைத் தாயின் (சிங்கிள் மதர்) உணர்வுப்பூர்வமான கதையை சொல்லும் திரைப்படம் ஆகும்.

 

விஜய் ஆண்டனி முதன்மை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் சுவாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனிஷ்காந்த், பாடினி குமார், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

‘நூறு சாமி’ திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சசி, “தாயை தெய்வமாக மதித்தான் அது ‘பிச்சைக்காரன்’, தாயை மனுஷியாக பார்க்க தொடங்கினான் அது ‘நூறு சாமி’. இந்த திரைப்படத்தின் முக்கிய அம்சங்களாக சுவாசிகாவின் அற்புத நடிப்பும், விஜய் ஆண்டனியின் வித்தியாச நடிப்பும் வெகுகாலம் பேசப்படும்,” என்றார்.

‘பிச்சைக்காரன்’ படத்திற்கு பின்னர் விஜய் ஆண்டனியுடன் இணைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இயக்குநர் சசி, “ஒரு நடிகராக இன்னும் பல மடங்கு மெருகேறியிருக்கிறார் அவர். கிராமத்து மனிதனாக வாழ்ந்திருக்கிறார். சுவாசிகாவும் அருமையான பங்களிப்பை தந்துள்ளார். ‘நூறு சாமி’ படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக அவர் திகழ்வார்,” என்றார்.

நகரம், கிராமம் என இரு பின்னணிகளிலும் படங்களை உருவாக்கி வரும் இயக்குநர் சசி, “நகரத்தில் வளர்ந்து வாழ்ந்து வரும் எனக்கு கிராமத்துக் கதைகளை எடுக்க மிகவும் பிடித்துள்ளது. அவற்றில் உள்ள சவால்களும், இடம் பெறும் மண் மணம் மாறா கதை மாந்தர்களும் இதற்கு காரணம்,” என்றார்.

‘நூறு சாமி’ திரைப்படத்திற்கு பாலஜி ஸ்ரீராம் இசையமைக்க, எஸ்.பி. தர்ஷன் கிர்லோஷ் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். ஹரிஷ் யுவராஜ் படத்தொகுப்பிற்கு பொறுப்பேற்க, வி. சசிகுமார் கலை இயக்கத்தை கவனித்துள்ளார். நடனம்: விஜி சதீஷ், சண்டைப் பயிற்சி: ராம்குமார், பாடல்கள்: மோகன் ராஜன், உடைகள் வடிவமைப்பு: துர்கா பிரியா, உடைகள்: கணேஷ். மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில், சசி இயக்கத்தில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் ‘நூறு சாமி’ திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

தினபலன்18 minutes ago

இன்றைய ராசிபலன் – 14 ஜூலை 2026 (செவ்வாய்க்கிழமை)

இந்தியா13 மணி நேரங்கள் ago

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (தமிழ்நாட்டில் வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம்)

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.07.2026

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/07/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (12.07.2026 – 19.07.2026): 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் – 12.07.2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகுகாலம் முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 ஜூலை 2026: 12 ராசிகளுக்குமான தினபலன், அதிர்ஷ்ட நேரம் மற்றும் பரிகாரம்!

சினிமா2 நாட்கள் ago

எஸ். ஜானகியின் மறக்க முடியாத 5 பாடல்கள்: தேசிய விருதுகள் முதல் இன்றைய Gen Z ரீல்ஸ் வரை ஒரு இசைப் பயணம்!

வணிகம்2 நாட்கள் ago

SBI Funds Management IPO: ரூ.11,692 கோடி பொதுப் பங்கு வெளியீடு – விலை, GMP, சந்தா தேதி முழு விவரம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

வணிகம்3 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்3 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

வணிகம்4 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO-வின் 13 புதிய மாற்றங்கள்: PF பணம் எடுப்பது முதல் ஆட்டோ டிரான்ஸ்பர் வரை… ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!

வணிகம்3 நாட்கள் ago

Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு OPS தேர்வு செய்ய புதிய வாய்ப்பு… CSIR முக்கிய அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

3 of top 10 Indian firms lose ₹1 trillion market cap, TCS worst hit last week
வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TCS B.Sc Ignite 2026 ஆட்சேர்ப்பு: B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

இந்தியா3 நாட்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

Translate »
Web content accessibility guidelines 2. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene. ip cam / cctv 解決方案.