சினிமா செய்திகள்
அதிதிராவ் வேண்டுகோள்: அதை பற்றி மட்டும் கேட்காதீர்கள்!

நடிகை அதிதிராவ் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எதுவும் கேட்காதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படம் மூலம் பரவலான கவனம் பெற்றவர் நடிகை அதிதிராவ். அதன்பிறகு தமிழில், ‘செக்கச் சிவந்த வானம்’, ‘சைகோ’ ஆகிய படங்களிலும் நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார் அதிதி. நடிகர் சித்தார்த்துடன் தற்போது காதலில் இருக்கிறார் அதிதி என தகவல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இதை உறுதிசெய்யும்படி நடிகர்கள் சித்தார்த் மற்றும் அதிதி இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வது, சமூகவலைதளங்களில் புகைப்படங்கள், ரீல்ஸ் பகிர்வது என உள்ளனர். மேலு, இந்த வருடம் காதலர் தினத்துக்கும் அதிதிக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் பகிர்ந்திருந்தார் சித்தார்த்.
இந்த நிலையில், நடிகை அதிதி ராவ் கொடுத்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் சித்தார்த்துடன் அவரது ரிலேஷன்ஷிப் குறித்து வரும் செய்திகள் குறித்தான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘ரசிகர்கள் பலரும் எங்களுடைய ரிலேஷன்ஷிப் குறித்து கவனம் குவிப்பதைக் காட்டிலும் என் படங்களையும் நடிப்பையும் கவனித்துப் பேசினால் மகிழ்ச்சியடைவேன். இப்போதைக்கு, படங்கள் நடிப்பதிலும் என் திறமையை வெளிக்கொண்டு வரும் இயக்குநர்களுடனும் வேலை பார்ப்பதில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறேன். அதனால், என் தனிப்பட்ட வாழ்க்கயை விட்டுவிட்டு என் வேலையை ரசிகர்கள் விமர்சிக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.