சினிமா செய்திகள்
சமந்தாவா? ஜோதிகாவா? ஓவியாவா? ஜெயிக்கப்போவது யாரு?

வெள்ளிக்கிழமையான இன்று, தமிழ் சினிமாவில் மூன்று முக்கிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. சமந்தா லீடு ரோல் செய்யும் ஓ பேபி, ஜோதிகா லீடு ரோல் செய்யும் ராட்சசி மற்றும் விமல், ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள களவாணி 2.
இந்த மூன்று படங்களில் எந்த படத்திற்கு அதிகப்படியான ஆதரவு உள்ளது என்றால், சமந்தாவின் ஓ பேபி மற்றும் ஜோவின் ராட்சசிக்குத் தான்.
களவாணி படம் மாபெரும் வெற்றியை பெற்றாலும், களவாணி 2 ரிலீஸ் பிரச்னையில் சிக்கி, ஓராண்டுகள் கிடப்பில் போடப்பட்டுள்ள படம், மேலும், இன்றும் அந்த படம் ரிலீசாகுமா? இல்லையா? என்ற பிரச்னை ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.
ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் என்பதால், காலை 5 மணி காட்சி எந்த படத்திற்கும் ஒதுக்கப்படவில்லை.
சமந்தாவின் ஓ பேபி திரைப்படம் 8 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறது. ஜோதிகாவின் ராட்சசி 10 மணிக்கும், அதே நேரத்தில் களவாணி 2 படமும் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி, டிக்கெட் புக்கிங்கும் நடந்து வருகிறது.
ஆனால், பெரிய நடிகர்கள் படங்கள் இன்று வெளிவராததால், டிக்கெட் புக்கிங் மந்த நிலையிலேயே உள்ளது.
மூன்று நாயகிகள் படங்கள் ரிலீஸ் ஆவதில், யாருக்கு வெற்றி கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.






















