சினிமா செய்திகள்
விபத்தில் சிக்கிய மணிமேகலை: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவி தொகுப்பாளினி மணிமேகலை திடீரென விபத்தில் சிக்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குக் வித் கோமாளி உள்பட பல நிகழ்சிகள் மூலம் பிரபலமானவர் மணிமேகலை. அவரும் அவருடைய கணவரும் சமீபத்தில் பிஎம்டபிள்யூ கார் வாங்கினார்கள் என்பது தெரிந்ததே. இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் அவரது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் பிஎம்டபிள்யூ கார் வாங்கினாலும் பழைய காரை அவ்வப்போது பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அந்த காரில் ஒரு லாங் டிரைவ் மணிமேகலை மற்றும் அவருடைய கணவர் சென்றுள்ளனர். அப்போது மணிமேகலை சென்ற காரும் லாரியும் எதிர்பாராதவிதமாக லேசாக உரசி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மணிமேகலைக்கும் அவரது கணவருக்கும் எந்தவித காயமும் இல்லை என்றாலும் கார் பலத்த சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள மணிமேகலை இது எங்களுக்கு வாழ்க்கையை மறக்க முடியாத சம்பவம் என்று தெரிவித்துள்ளார். மேலும் காரை மணிமேகலை தான் ஓடியதாகவும் ஆனால் தன் மேல் எந்த தவறும் இல்லை என்றும் மணிமேகலை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மணிமேகலைக்கு விபத்து நடந்த தகவல் தெரிந்தவுடன் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு ஹுசனை காதலித்த போது அவருடைய பிறந்த நாளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஹைதராபாத் வரை காரில் மணிமேகலை சென்றார் என்பதும் அவர் சென்னை திரும்பிக் கொண்டிருக்கும் போது விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








