இந்தியா
கார் பானெட்டில் தொங்கிய முதியவர்… 8 கிமீ இழுத்து சென்ற கொடூர டிரைவர்!
Published
1 week agoon
By
Shiva
விபத்தை ஏற்படுத்திவிட்டு விபத்துக்குள்ளானவரை பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லும் கொடூர சம்பவம் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நடந்து வருகிறது.
புத்தாண்டு தினத்தில் டெல்லியில் அஞ்சலி சிங் என்ற 20 வயது இளம் பெண்ணை காரில் இருந்தவர்கள் 12 கிலோமீட்டர் இழுத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருடைய உயிரிழப்புக்கு பின்னாவது ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நினைத்தால் தொடர்ந்து அது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் பெங்களூரில் 29 வயதான தொழிலதிபர் ஒருவரின் காரில் விபத்துக்குள்ளான வரை மூன்று கிலோ மீட்டர் இழுத்துச் சென்றதாக கூறப்பட்டு அதன் பின் அவர் கைது செய்யப்பட்டார். அதேபோல் பைக் ஓட்டுநர் ஒருவர் 70 வயது முதியவர் ஒருவரை கிட்டத்தட்ட ஒரு மீட்டருக்கு தரதரவென்று இழுத்துச் சென்றார். இந்த சம்பவங்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது மீண்டும் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது. பீகாரை சேர்ந்த 70 வயது முதியவர் சங்கர் சவுத்ரி என்பவர் தனது சைக்கிளில் தனது வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கார் ஒன்று அவர் மீது திடீரென மோதியதால் விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்த முதியவர் கார் பேனட்டில் விழுந்தார். விபத்து நடந்தது நன்றாக தெரிந்தும் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தார்.
பானட்டில் தொங்கிக் கொண்டிருந்த அந்த முதியவர் காரை நிறுத்துமாறு டிரைவர் இடம் கெஞ்சினார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஓட்டுநரை நிறுத்துமாறு கூறினார்கள். ஆனால் அவர்களை கண்டு கொள்ளாமல் டிரைவர் மிக வேகத்தில் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்டத்தில் டிரைவர் காரை நிறுத்தியதை அடுத்து முதியவர் கீழே விழுந்தார். ஆனால் பொதுமக்கள் அவரை நோக்கி படையெடுத்து விடுவார்கள் என்ற அஞ்சியதால் மீண்டும் அவர் காரை எடுத்ததால் முதியோர் மீது கார் ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே அந்த முதியவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். தற்போது காரை மட்டும் பறிமுதல் செய்திருப்பதாகவும் டிரைவர் தலைமறைவாக இருப்பதால் அவரை தேடி வருவதாகவும் புறப்படுகிறது. இது போன்ற மனசாட்சியே இல்லாத கொடூர டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் காவல்துறை அனைத்து ஓட்டுநர்களுக்கும் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
You may like
-
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் நடுவானில் மோதல்.. விமானி உயிரிழப்பு!
-
அலுவலகம் செல்லும் ஊழியர்களுக்கு கார், பைக் தேவையா? எவ்வளவு பணம் மிச்சப்படும் தெரியுமா?
-
தமிழகத்தில் மட்டுமல்ல.. பீகாரிலும் நீட் தேர்வு அழுத்தத்தால் தற்கொலை முயற்சி: அதிர்ச்சி சம்பவம்
-
பைக்கில் 1 கிமீ இழுத்து செல்லப்பட்ட முதியவர்.. ஈவு இரக்கமில்லா இளைஞர் கைது: அதிர்ச்சி வீடியோ
-
423 விபத்துக்கள்.. கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை.. பரிதாபமாக உயிரிழந்த ஜோஹோ பெண் ஊழியர்!
-
இளம்பெண்ணிடம் கொள்ளையடித்த திருடனுக்கு நேர்ந்த விபரீத முடிவு! கர்மா என்பது இதுதானா?