Connect with us

தமிழ்நாடு

423 விபத்துக்கள்.. கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை.. பரிதாபமாக உயிரிழந்த ஜோஹோ பெண் ஊழியர்!

Published

on

By

தாம்பரம் – மதுரவாயில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே 423 விபத்துக்கள் நடந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு இளம்பெண் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று 22 வயது இளம் பெண் ஒருவர் தனது சகோதரரை நீட் பயிற்சி வகுப்பிற்காக அழைத்துச் செல்ல தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென சாலையில் இருந்த ஒரு பள்ளம் காரணமாக அவர் பேலன்ஸ் தவறி கீழே விழுந்தார். இதனையடுத்து பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த இளம்பெண் ஜோஹோ நிறுவனத்தின் ஊழியர் என்பதால் அந்நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தத்தை தெரிவித்துள்ளார். ஒரு மோசமான ரோடு காரணமாக ஒரு குடும்பம் தனது அன்பான மகளை இழந்து விட்டது என்றும் எங்கள் நிறுவனம் ஒரு நல்ல ஊழியரை இழந்து விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சாலையில் வடிகால் 32 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டாலும், 11 கிலோமீட்டர் நீளத்திற்கு மட்டுமே மூடப்பட்டுள்ளதாகவும் மீதி உள்ள தூரத்தை மூடுவதற்காக மேல் அதிகாரிகளின் உத்தரவுக்கு காத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த சாலையில் 423 சாலை விபத்துக்கள் நடந்துள்ள நிலையில் தற்போது தான் இளம்பெண்ணின் மறைவிற்குப் பின்னர் சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்யும் பணி நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

சென்னையில் சாலையில் பள்ளங்கள் சிக்கி மரணம் நிகழ்வது தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் சென்னை சாலைகளில் உள்ள பள்ளங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் ஒருசாலை விபத்து கூட நடைபெறவில்லை என கடந்த 2021ஆம் ஆண்டு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது. ஆனால் மதுரையில் மட்டும் நடந்த சாலை விபத்தில் 4 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாக உள்ளது.

 

இதுபோன்ற விபத்துகள் நடக்கும் போது அந்த சாலை யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பதை ஒரு சில துறைகள் மாற்றி மாற்றி கூறி வருவதால் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது யார் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது. நேற்று விபத்து நடந்த இந்த சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் இந்த சாலை மாநில நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் வரும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆனால் மாநில நெடுஞ்சாலை துறையோ, இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் வருவதாக கூறி மாறிமாறி கை காட்டி வருகிறது.

மொத்தத்தில் சாலையின் தரத்தை அதிகரித்தால் மட்டுமே விபத்துகள் நடக்காமல் இருக்கும் என்றும் சாலைகளின் தரத்தை பராமரிக்க வேண்டியது மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றின் கடமை என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

வேலைவாய்ப்பு4 mins ago

இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு18 mins ago

MBBS முடித்தவர்களுக்கு இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு25 mins ago

ரூ.75000/- ஊதியத்தில் இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு35 mins ago

UPSC-யின் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு3 hours ago

மின் – ஆதார் எண்களை இணைக்க கால அவகாசம்.. எத்தனை நாட்கள் தெரியுமா?

உலகம்4 hours ago

ஆசைக்கு இணங்காததால் வேலைநீக்கம் செய்யப்பட்டேன்.. கூகுள் பெண் அதிகாரி மீது ஆண் அதிகாரி குற்றச்சாட்டு!

இந்தியா4 hours ago

உலக பணக்காரர் பட்டியல்.. டாப் 10ல் இருந்து வெளியேற்றப்பட்ட அதானி..!

வேலைவாய்ப்பு5 hours ago

தமிழக TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 hours ago

ரூ.14,600/- ஊதியத்தில் HMT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 hours ago

SBI Mutual Fund நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா3 days ago

அதானிக்கு ஆப்பு வைத்த ஹிண்டர்பர்க் நிறுவனத்தின் உரிமையாளர் யார் தெரியுமா? தனிப்பட்ட முறையில் செம லாபம்..!

வணிகம்4 days ago

அதிரடியாக குறைந்தது ஆபரணத் தங்கம் விலை (27/01/2023)!

உலகம்6 days ago

பணி நீக்கத்திற்கு பின் சுந்தர் பிச்சை எடுத்த அதிரடி நடவடிக்கை: கூகுள் ஊழியர்கள் அதிர்ச்சி!

வணிகம்2 days ago

இன்று தங்கம் விலை (29/01/2023)!

உலகம்24 hours ago

3 மாதங்களுக்கு முன் 4000, இப்போது 6000.. வேலைநீக்க அறிவிப்பை வெளியிட்ட இன்னொரு நிறுவனம்!

சினிமா2 days ago

ஜிமிக்கி பொண்ணு பாடல் ரிலீஸ்; ராஷ்மிகாவின் அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!

வணிகம்6 days ago

தங்கம் விலை சரிவு (25/01/2023)!

தமிழ்நாடு2 days ago

மதுரையில் மெட்ரோ ரயில்.. எப்போது? எந்த வழித்தடத்தில்?

வேலைவாய்ப்பு2 days ago

தமிழ்நாடு வனத்துறை வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா1 day ago

அதானி குழுமத்தின் பங்குகள் ரூ.1 என இறங்கினால் கூட எல்.ஐ.சிக்கு நஷ்டமில்லை.. எப்படி தெரியுமா?