சினிமா செய்திகள்
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் கடந்த 1940 ஆம் ஆண்டிலிருந்து 80 ஆண்டுகளுக்கும் மேலாக பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி உள்ளதாக கின்னஸ் சாதனை புரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 92 வயது ஆகும் லதா மங்கேஷ்கர் அவர்களுக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
லதா மங்கேஷ்கர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.





