உலகம்
💥 மீண்டும் கொரோனா பரவல்! எச்சரிக்கை!!

ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வேகமாகப் பரவி வருவதாகவும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளது. என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறி உள்ளனர். அங்கு தற்போதுள்ள கொரோனா தொற்று சதவீதம் 11.4 ஆகும். இதுவே கடந்த மார்ச்சில் 1.7 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
பரிசோதனை மாதிரிகளில் பெரும்பாலானவற்றில் தொற்றுகள் உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது. ஹாங்காங்கின் நிலைமை இப்படி இருக்க சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 28 சதவீதம் கொரோனா தொற்றுகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தற்போது, 14,200 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை கூறி உள்ளது.


















