சினிமா செய்திகள்
மீண்டும் சூரியாவுடன் இணையும் காஜல்!

சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் சூரியாவின் 39வது படத்தில் நடிக்க காஜல் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூரியா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில், அவர் நடிக்கும் சூரரைப் போற்று படம் கிறுஸ்துமஸ்க்கு வெளியாகும் என தகவல் வந்திருந்தது. மேலும் சூரியாவின் 39வது படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார்.
சூரியாவின் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஏற்கனவே மற்றான் படத்தில் சூரியாவும் காஜலும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தோல்வி படங்களை தந்துக்கொண்டிருக்கும் சூரியா காப்பான், சூரரைப் போற்று மற்றும் சிவா இயக்கும் புதிய படம் இவைகளின் மூலம் பழைய ஃபார்மிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

















