சினிமா
கங்குவா படத்திற்காக ஆளே மாறிய சூர்யா; என்னவொரு வெறித்தனம்!

நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா சமீப காலமாக தலை கீழாக நின்றபடி வொர்க்கவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், நடிகர் சூர்யா கையில் வெயிட் லிஃப்ட் உடன் செம மாஸாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்து வரும் கங்குவா படத்தின் ஃபிளாஷ்பேக் போர்ஷனுக்காக ஆளே அடையாளம் தெரியாமல் உடல் எடையை அதிகரித்து செம பாடி பில்டராக மாறி உள்ளார் சூர்யா.

#image_title
கங்குவா, வாடிவாசல் என அடுத்தடுத்து எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் படங்களில் நடித்து வரும் சூர்யாவின் இந்த லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
பாலாவின் வணங்கான் படத்தில் இருந்து விலகிய நிலையில், நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
10 மொழிகளில் 3டி படமாக இந்த கங்குவா உருவாகி வருகிறது. வரலாற்று போர் வீரனாக இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் நடிகர் சூர்யா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.