சினிமா
சூர்யா 42 டைட்டில் அறிவிப்பு வருது; புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 42 படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 16ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஷார்ப்பாக எத்தனை மணிக்கு அப்டேட் வரும் என்கிற அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
சூரரைப் போற்று, ஜெய்பீம் என ஓடிடியில் தரமான படங்களை வெளியிட்டு வந்த சூர்யா தியேட்டரில் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார்.

#image_title
ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் விமர்சன ரீதியாகவோ அல்லது வசூல் ரீதியாகவோ வெற்றிப் பெறாமல் சொதப்பியது. இந்நிலையில், பெரும் பொருட்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் சூர்யா 42 படத்திற்காக நடிகர் சூர்யா காத்துக் கொண்டிருக்கிறார். அவரது ரசிகர்களும் சூர்யா 42 படத்திற்காக காத்திருக்கின்றனர்.
இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த வணங்கான் படத்தில் இருந்து பாதியிலேயே சூர்யா விலகிய நிலையில், அந்த படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார்.

#image_title
இந்நிலையில், வரும் ஏப்ரல் 16ம் தேதி காலை 9:05 மணிக்கு சூர்யாவின் 42வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடப் போவதாக புதிய போஸ்டருடன் தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யா குதிரையில் ஒரு மலையில் இருந்து இன்னொரு மலைக்கு முத்து படத்தில் ரஜினிகாந்த் குதிரை வண்டியில் தாண்டுவதை போல தாண்ட காத்திருக்கிறார். அவருடன் ஒரு நாய்க்குட்டியும் குதிரைக்கு கீழே இருப்பது போன்ற அட்டகாசமான போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

#image_title
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். மேலும், 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.