சினிமா செய்திகள்
டாப்சி – ஜெயம் ரவி புது காம்போ!

அகமது இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார், ஜெயம்ரவி அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார்.
என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் அகமது. தற்போது அவர் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்துவருகிறது.
இந்த படத்தில் தான் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். ஆடுகளம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான டாப்சி, பாலிவுட்டில் நிறைய படங்கள் நடித்துள்ளார். சமிபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்துள்ள மிஷன் மங்கள் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதுவரை ஜெயம் ரவியும் டாப்சியும் இணைந்து படம் நடித்ததில்லை, இதுவே அவர்கள் சேர்ந்து நடிக்கும் முதல் படமாகும்.

















